கனிஷ்ட பாடசாலை தவணை பரீட்சசைகள் இரத்து

கனிஷ்ட பாடசாலை மாணவர்களுக்கு 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் ஆரம்பிக்கும் புதிய கல்வியாண்டு முதல் தவணை பரீட்சைகள் இரத்து செய்யப்படுவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த் தெரிவித்துள்ளார்.

2023 ஆம் ஆண்டு முதல் கல்வி நடவடிக்கைகள் மற்றும் பரீட்சசைககளில் மாற்றங்கள் செய்யப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படும் நிலையிலில் முதல் மாற்றமாக இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது.

பயிற்சி அடிப்படையிலான செயற்பாடுகள் மாணவர்களுக்கு வழங்கப்படும். அவற்றின் புள்ளிகள் தொடர்ச்சியாக பதியப்படும். அவற்றின் மதிப்பீட்டு புள்ளிகள், வருட இறுதிப் பரீட்சசையுடன் சேர்க்கப்படும் என அமைச்சர் கூறியுள்ளார்.

பயிற்சி அடிப்படையிலான கல்வி நடவடிக்கைகளே இனி வரும் காலங்களில் முன்னெடுக்கப்படுமெனவும், பாடசாலைகளை விட்டு மாணவர்கள் வெளியேறும் போது அவர்களது திறமைகளுக்கு ஏற்ப அவர்களுக்கு இயலுமானவற்றை, தொழில்நுப்ட ரீதியில் பல்கலை கழகங்கள் மற்றும் தொழில்நுட்ப கல்லூரிக்கு தகுதி பெறக்கூடியவர்களாக மாணவர்களை மாற்றுவதற்கான கல்வி திட்டங்கள் தொடர்பில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக மேலும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அடுத்த வருடம் டிசம்பர் மாதத்தில் பாடசாலைகளை ஆரம்பிக்கும் வகையில் பாடசாலை விடுமுறைகள் குறைக்கப்படுமெனவும் கலவியமைச்சர் சுசில் பிரேம்ஜயந் கூறியுள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version