இலங்கையில் அரச அதிகாரிகள் ராஜாக்கள் – தென் கொரியா அதிகாரி விமர்சனம்

ஒரு நாட்டின் மக்களே இறையாண்மை உடையவர்களாக இருக்க வேண்டும். ஆனால் இலங்கையில் அரச அதிகாரிகள் மன்னர்களாக காணப்படுகின்றனர் என தென் கொரியா அனர்த்த நிவாரண நிலையத்தின் தலைவர் சோ சுங் லியா தெரிவித்துள்ளார்.

இலங்கை வந்துள்ள அவர் நேற்று சமூக வலுவூட்டல் அமைச்சில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதனை தெரிவித்தார். இலங்கையின் பல திட்டங்கள் தொடர்பில் கடும் விமசனங்களை முன் வைத்துள்ளார்.

அரசு அதிகாரிகளில் சீர்திருத்தம் வேண்டுமெனவும், அரசியல்வாதிகள் நாட்டில் மிகவும் மரியாதைக்குரியவர்கள் அல்ல எனவும், தென் கொரியாவில், எந்தவொரு அரச நிறுவனத்தில் சேவையினை பெற்றுக் கொள்ளும் பொது மகனும் அரச அதிகாரிகளிடமிருந்து மரியாதையினை பெற்றுக்கொள்ளுவார்கள். ஆனால் இலங்கையின் நிலைமை மிகவும் வித்தியாசமானது, என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இலங்கையின் நிறைவேற்று அதிகாரம், சட்டவாக்கம், நீதித்துறை, அரசியல் மற்றும் கல்வி முறைமை போன்றவற்றில் மாற்றங்கள் வந்தால் மட்டுமே நாடு முன்னேற முடியுமெனவும், மக்களின் மன நிலை மாற வேண்டுமெனவும், மாறினால் மட்டுமே நாடு அபிவிருத்தி அடையமுடியுமென அவர் கூறியுள்ளார்.

புதிய கிராம திட்டங்களை உருவாக்குவதன் மூலமே இலங்கையினை முன்னேற்ற முடியுமெனவும், அவ்வாறே தென் கொரியா 40 வருடங்களில் பலமான அபிவிருத்தியடைந்த நாடாக முன்னேறியதாக கூறியுள்ள அவர், இந்த கிராம திட்டங்களை கடை நிலையில் நடைமுறைப்படுத்துவதன் மூலமே வெற்றி பெற முடியுமெனவும் ஆலோசனை வழங்கியுள்ளார்.

கிராமங்களில் வீதிகளை புனரமைப்பு செய்ய வேண்டும். அதன் மூலமே வேகமான போக்குவரத்து ஆரம்பிக்கப்படும். நாடு அபிவிருத்தி அடையும். அவ்வாறான திட்டங்களுக்கு தென் கொரியா அரசாங்கம் முதலீடுகளை செய்து வருகிறது எனவும் தமது நாட்டின் திட்டங்கள் தொடர்பில் விளக்கமளித்தார்.

இலங்கை அபிவிருத்தி அடைய வேண்டுமெனின் மக்களின் சிந்தனைகள் மாற வேண்டும். அதற்கு கல்வி திட்டங்கள் மாற்றமடைய வேண்டும். ஆசிரியர்கள் மாற வேண்டும். அந்த மாற்றமின்றி மாற்றங்கள் எதுவும் சாத்தியமே இல்லை. அதற்கு ஆசிரியர்களின் சிந்தனை போக்கு என்பனவற்றில் மாற்றம் ஏற்பட வேண்டும். இலங்கையில் பிள்ளைகள் எவற்றை அனுபவிக்கிறார்கள் என்பதனை ஆசிரியர்கள் உணர வேண்டும். கல்வி அபிவிருத்திக்கு புதிய கட்டடங்கள் அவசியமில்லை. ஆனால் நல்ல ஆசிரியர்கள் தேவை எனவும் அறிவுரை வழங்கியுள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version