ஐ.டி.எம் கல்வி நிறுவனத்தின் தலைவர் விநாயகமூர்த்தி ஜனகனுக்கு ஐக்கிய அரபு இராட்ச்சியத்தில் அவரது கல்வி சேவையினை பாராட்டி விருது வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளது.
ஐ.டி.எம் சர்வதேச பலக்லைக்கழம் எனும் கல்வி நிறுவனத்தை, ஷார்ஜா, ஐக்கிய அரபு இராட்சியத்தில் நிறுவி அதன் மூலம் சட்டம் மற்றும் முகாமைத்துவம் அடங்கலாக பல கற்கை நெறிகளை ஐ.டி.எம் சர்வதேச பலக்லைக்கழம் வழங்கி வருகிறது.
Law 2.0 Conference 2022 எனும் நிகழ்விலேயே ஜனகனக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. “குறுகிய காலத்தில் சட்டத்துறை கல்வியினை ஐக்கிய அரபு இராச்சியத்தில் வழங்குவதில் நாம் அடைந்த வெற்றிக்கு இந்த award சான்றாக உள்ளது. “அனைவருக்குக்ம் சட்டக்கல்வி” என்ற எமது குறிக்கோள் நோக்கிய பயணத்தின் ஒரு மையில் கல்லாகவும், ஒரு அங்கீகாரமுமாக இந்த award இனை நாம் கருதுகிறோம்” என ஜனகன் இந்த விருது பற்றி தெரிவித்துள்ளார்.