உணவு பணவீக்கத்தில் 7ம் இடத்தில் இலங்கை!

உலக வங்கியின் சமீபத்திய ஆய்வின்படி, உலகிலேயே அதிக உணவு விலை பணவீக்கம் உள்ள 10 நாடுகளில் இலங்கை 7வது இடத்தில் அமைந்துள்ளது.

அறிக்கையின்படி,  ஜிம்பாப்வே, லெபனான், வெனிசுலா, துருக்கி, அர்ஜென்டினா மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் இந்த மதிப்பீட்டில் முதல் ஆறு இடங்களில் உள்ளதுடன், ருவாண்டா, சுரினாம் மற்றும் ஹங்கேரி ஆகியவை இலங்கைக்கு பின் தர வரிசையில் அமைந்துள்ளது.

உலகம் முழுவதும் உணவு விலை பணவீக்கம் அதிகமாக இருப்பதாகவும், 2022 ஆகஸ்ட் முதல் நவம்பர் வரையிலான தரவுகளின் அடிப்படையில் அனைத்து குறைந்த வருமானம் மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளிலும் அதிக பணவீக்கத்தைக் காட்டியுள்ளதாகவும் உலக வங்கி தெரிவித்துள்ளது.

அதிக உணவுப் பொருட்களின் விலை பணவீக்கம் உள்ள உயர் வருவாய் ஈட்டும் நாடுகளின் பட்டியலில் ஆப்பிரிக்கா, வட அமெரிக்கா, லத்தீன் அமெரிக்கா, தெற்காசியா, ஐரோப்பா மற்றும் மத்திய ஆசியா ஆகிய நாடுகளில் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் உள்ளன.உணவு பணவீக்கத்தில் 7ம் இடத்தில் இலங்கை!

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version