திலினி பிரியமாலிக்கு விடுதலை!

பாரிய நிதி மோசடியில் ஈடுபட்ட திலினி பிரியமாலி சற்று முன்னர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

இதன்படி நிதி மோசடி தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பிரியமாலி, பிணை நிபந்தனைகளை பூர்த்தி செய்ததன் பின்னர் இன்று (27.12) சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகமும் பேச்சாளருமான சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

திலினி பிரியமாலி அண்மையில் விடுக்கப்பட்ட பிணை நிபந்தனைகளில் கையெழுத்திடுவதற்காக இன்று காலை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

கடுமையான பிணை நிபந்தனைகளின் அடிப்படையில் கடந்த 16ம் திகதி இவர் விடுவிக்கப்படிருந்தார்.

 

திலினி பிரியமாலிக்கு விடுதலை!

Social Share

Leave a Reply