2023ல் இலங்கை உலக நாடுகளிடம் கையேந்த கூடாது!

2023ஆம் ஆண்டு இலங்கை யாசகக் கிண்ணத்துடன் உலகம் முழுவதும் செல்லாமல், தேசத்தை கட்டியெழுப்ப புதிய கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும் என கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

“புத்தாண்டில் நாடு முன்னேற புதிய கட்டமைப்பை உருவாக்குவதற்கு நாம் உழைக்க வேண்டும், மேலும் யாசக கிண்ணத்துடன் உலகம் முழுவதும் செல்வதை நிறுத்த வேண்டும். அதைச் செய்யாவிட்டால் தேசம் அழிந்துவிடும் என கர்தினால் ஆண்டகை தமது விசேட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

“2023 இல் இலங்கை சுதந்திரம் அடைது 75 ஆண்டுகள் ஆகின்றது, இலங்கையுடன் சுதந்திரம் பெற்ற பல நாடுகள் முன்னேற்றம் கண்டுள்ளது, ஆனால் இலங்கை மட்டும் ஒரு ஏழை நாடு என்ற பிம்பத்தைப் பெற்றுள்ளது. காலங்காலமாக தேசத்தை ஆட்சி செய்தவர்கள் எடுக்கும் தவறான முடிவுகளால் நாம் இத்தகைய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்,” என தெரிவித்துள்ளார்.

“இலங்கை ஒற்றுமையைப் பாதுகாக்க வேண்டும், அதன் மக்கள் வேறுபாடுகளை மறந்து புதிய ஆண்டில் தேசத்தின் நலனுக்காக ஒன்றுபட வேண்டும்” என்று பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

 

2023ல் இலங்கை உலக நாடுகளிடம் கையேந்த கூடாது!

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version