அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள சிறைச்சாலையில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 14 பேர் உயிரிழந்துள்ளனர்.
பாதுகாப்பு வாகனங்களில் வந்த பல ஆயுததாரிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 10 சிறைச்சாலை பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் 4 கைதிகள் கொல்லப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும் இந்த சம்பவத்தில் 13 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டு தாக்குதலின்போது சிறைச்சாலையிலிருந்து 30 கைதிகள் தப்பிச் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
