நாட்காட்டிகள் மற்றும் நாட்குறிப்புகளை அச்சிடுவது 90 வீதத்தால் குறைந்துள்ளதாக இலங்கை அச்சக சங்கத் தலைவர் ஆரியதாச வீரமன் தெரிவித்துள்ளார்.
நாட்காட்டிகள், புத்தகங்கள் மற்றும் நாட்குறிப்புகள் அச்சிடுவது தற்போது மிகவும் குறைந்துள்ளதாக, இலங்கை புத்தகப் பதிப்பாளர் சங்கத்தின் தலைவர் வீரமன் தெரிவித்துள்ளார்.
காகிதத்தின் விலை உயர்வால் புத்தகங்களை வெளியிடுவதும், பிற பொருட்களை அச்சிடுவதும் தற்காலத்தில் கனவாகி விட்டதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
உரிய “அதிகாரிகள் நிலைமையில் கவனம் செலுத்தி தீர்வு காண வேண்டும்,” என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
