டீசலின் விலை 15 ரூபாவால் குறைக்கப்பட்ட போதிலும், பஸ் கட்டணத்தை குறைப்பது நடைமுறைச் சாத்தியமற்றது என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
தற்போதைய பஸ் கட்டணத்தில் கட்டண சதவீதத்தை கணக்கிடுவது கடினமானது இருப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
பஸ் கட்டண திருத்தத்தை மேற்கொள்ள வேண்டும் எனில் ஒரு லிட்டர் டீசலின் விலை 4% அல்லது அதற்கு மேல் குறைக்கப்பட வேண்டும். தற்போதைய எரிபொருள் விலை குறைப்புக்கு, கட்டண விலையை குறைப்பது ஒருபோதும் சாத்தியமற்றது. எனினும், நாங்கள் பொதுப்போக்குவரத்து சேவையை சரியான முறையில் முன்னெடுக்க தேவையான எரிபொருள் எமக்கு இப்போது கிடைக்கின்றது, அதனால் எங்களுக்கு முழுமையான சேவையை வழங்க முடிகிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.
மேலும்,“ரயில் சேவையில் எங்களுக்கு எந்த சிக்கலும் இல்லை. ரயில் சேவைகள் பயன்படுத்தப்படுகிறதோ இல்லையோ, சிறந்த சேவைக்காக பேருந்துகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த நாட்களில், ரயில்கள் மிகவும் தாமதமாக வருவதால், மக்கள் உரிய நேரத்தில் தங்கள் பணிகளுக்கு செல்ல முடியவில்லை. எனவே மக்கள் தங்கள் தேவைகளை பூர்த்தி செய்ய தனியார் பேருந்து சேவையை பயன்படுத்துமாறு தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பாக கேட்டுக்கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், டொலருக்குப் பதிலாக இந்திய நாணயத்தைப் பயன்படுத்தி இந்தியாவில் இருந்து உதிரி பாகங்களை இறக்குமதி செய்ய அரசாங்கம் தற்போது முயற்சித்து வருவதால், முயற்சி வெற்றியளித்தால் பஸ் கட்டணத்தை கணிசமான அளவில் குறைக்க முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
