இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலையை குறைக்க இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது.
இதன்படி லங்கா ஆட்டோ டீசல் ஒரு லீற்றர் 15 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது, மற்றும் லங்கா மண்ணெண்ணெய் ஒரு லிட்டர் 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.
எனவே, லங்கா Auto டீசல் ஒரு லீற்றரின் புதிய விலை 405 ரூபாவாகவும் மற்றும் மண்ணெண்ணெய் ஒரு லீற்றரின் புதிய விலை 355 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஒரு லீற்றர் பெற்றோல் 95 ஒக்டேன் (ரூ.510), லங்கா சுப்பர் டீசல் 4 ஸ்டார் (ரூ.510), லங்கா பெற்றோல் 92 ஒக்டேன் (ரூ.370) மற்றும் லங்கா இண்டஸ்ட்ரியல் மண்ணெண்ணெய் (ரூ.464) ஆகியவற்றின் விலைகளில் மாற்றம் இல்லை.