ராஜமெளலீயுடன் இணையும் கமல்!

‘மகதீரா, நான் ஈ, பாகுபலி, ஆர்.ஆர்.ஆர்.’ போன்ற பிரமாண்ட திரைப்படங்களில் சொந்தக்காரரான ராஜமெளலீ தனக்கென தான ரசிகர் பட்டாளத்தை கொண்டவர். வித்தியாசமான கதைக்களம் கொண்ட இவரது இயக்கத்தில் நடிக்க முன்னணி நடிகர்-நடிகைகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில் ராஜமெளலீ இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்க பேச்சுவார்த்தை நடப்பதாக சமூகவலைத்தளங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளது. சமீபத்தில் கமல் மற்றும் ராஜமெளலீ சந்தித்து கலந்துரையாடியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

எனினும் இது குறித்து உத்தியோகபூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரையில் வெளியாகவில்லை. மேலும் இருவர் தரப்பிலும் இதனை உறுதிப்படுத்தவில்லை. வெகு விரைவில் நற்செய்தி வரும் என கமல் மற்றும் ராஜமெளலீ ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

ராஜமெளலீயுடன் இணையும் கமல்!

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version