வெலிக்கடை, தியவன்னா ஓயாவில் நேற்று (04.01) பிற்பகல் சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் சுமார் 67 வயதுடையவர் மற்றும் மாளிகாவத்தை பிரதேசத்தை வசிப்பிடமாக கொண்டவர் என தெரியவந்துள்ளது.
சடலம் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் வெலிக்கடை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, அங்குலான, சமுத்திரசன்ன வீதி, அங்குலான பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் உயிரிழந்த நபரொருவரின் சடலம் நேற்று (04.01) கண்டெடுக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் அங்குலான பிரதேசத்தை வசிப்பிடமாக கொண்ட 68 வயதுடைய நபர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் குறித்து அங்குலான போலீசார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
