இலங்கையில் தடை செய்யப்பட்ட சுமார் 6 லட்சம் ரூபாய் பெறுமதியான போதை மாத்திரைகளை தமிழக காவல்துறையினர் நேற்று ராமநாதபுரத்திற்கு அருகில் உள்ள கடற்பரப்பில் கைப்பற்றியதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கைப்பற்றப்பட்ட போதை மாத்திரைகள் இலங்கைக்கு கடத்துவதற்காக தயார் செய்யப்பட்டிருந்த நிலையில் கைப்பற்றப்பட்டதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இலங்கைக்கு கடத்தப்பட தயார் நிலையில் படகில் வைக்கப்பட்டிருந்த பெட்டிகளிலிருந்து சுமார் 6 இலட்சம் போதை மாத்திரை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். இந்த சுற்றிவளைப்பின்போது தப்பிச்சென்ற சந்தேகநபர்களை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.
மேலும் இவ்வாறான குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளதால்
கடலோர பகுதிகளில் தீவிர சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க அந்நாட்டு பொலிஸார் தீர்மானித்துள்ளனர்.
