லாஃப்ஸ் எரிவாயுவின் விலை குறைக்கப்பட்டுள்ளது.
இதன்படி, 12.5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 5,080 ரூபாய் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
5 கிலோ கிராம் எடை கொண்ட லாஃப்ஸ் சிலிண்டரின் புதிய விலை 2,032 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மாவட்டங்களுக்கு ஏற்ப திருத்தப்பட்ட எரிவாயு விலைகளை அறிந்து கொள்ள வாடிக்கையாளர் சேவை எண்ணான 1345 ஐ அழைக்குமாறு லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.
