19 வயதுக்கு உட்பட்ட மகளிர் உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்குபற்றுவதற்கான இலங்கை அணி இன்று(06.01) பிற்பகல் தென்னாபிரிக்கா பயணமாகியுள்ளது. இலங்கை கிரிக்கெட் தலைமையகத்திலிருந்து அணி பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு சென்று அங்கிருந்து தென்னாபிரிக்கா பயணமாகியுள்ளது.
இம்மாதம் 14 ஆம் திகதி தென்னாபிரிக்காவில் 19 வயதுக்கு உட்பட்ட மகளிர் உலக கிண்ண கிரிக்கெட் தொடர் ஆரம்பிக்கவுள்ளது. 29 ஆம் திகதி இறுதிப் போட்டி நடைபெறவுள்ளது.
குழு A யிலுள்ள இலங்கை அணி முதல் நாளில் அமெரிக்கா அணியினை சந்திக்கவுள்ளது.
