ஜனவரி 17ம் திகதிக்குப் பின்னர் 2022 க.பொ.த உயர்தர பரீட்சையை இலக்காகக் கொண்ட பயிற்சி வகுப்புகளை நடத்துவது தடைசெய்யப்பட்டுள்ளது என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பாடம் சார்ந்த விரிவுரைகள், கருத்தரங்குகள் அல்லது வகுப்புகளை ஏற்பாடு செய்தல், நடத்துதல், பரீட்சை சார்ந்த வினாத்தாள்களை அச்சிடுதல், விநியோகம் செய்தல் மற்றும் இலத்திரனியல் ஊடகங்கள் ஊடாக விளம்பரம் செய்தல், பரீட்சைக்கு தேவையான வினாக்களை வழங்குவதாகக் கூறி சுவரொட்டிகள் மற்றும் பதாகைகளை வழங்குதல் ஆகியவை தடை செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
2022 க.பொ.த உயர்தர பரீட்சையை எதிர்வரும் (23.01) திகதி ஆரம்பம்பமாகி (17.02) வரை நடைபெறவுள்ளது.
யாரேனும் ஒரு நபரோ அல்லது ஒரு நிறுவனமோ இந்த விதிமுறைகளை மீறி செயற்பட்டால், அருகிலுள்ள காவல் நிலையம், தேர்வுகள் திணைக்களம் அல்லது பின்வரும் இலக்கங்களுக்கு அழைப்பை ஏற்படுத்தி முறைப்பாடு செய்யலாம், என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் தலைமையகம்: 0112421111
காவல்துறை அவசரநிலை எண் : 119
உடனடி அழைப்பு (பரீட்சைகள் திணைக்களம்): 1911
பாடசாலை பரீட்சைகள் ஏற்பாட்டு கிளை: 0112784208 / 0112784537
