‘சீன பயணிகள் மீதான கட்டுப்பாடு நல்லது’ – உலக சுகாதார அமைப்பு!

சீனாவில் உருமாறிய ஒமிக்ரோன் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. எனவே பல நாடுகள் தமது நாட்டில் இந்த தொற்று மீண்டும் பரவ பெற்று விடக்கூடாது என கருதி முன் எச்சரிக்கையாக கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன.

சீனாவில் இருந்து வரும் பயணிகளுக்கு இந்தியா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் கொரோனா தோற்று பரிசோதனை சான்றிதழை கட்டாயமாக்கியுள்ளது. இந்த பாதுகாப்பு செயற்பாட்டினை உலக சுகாதார அமைப்பு நியாயப்படுத்தி உள்ளது.

இந்நிலையில், உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் ஜெனீவாவில் காணொலிக் காட்சி வழியாக நேர்காணலொன்றில் இணைந்துகொண்டபோது, சீனாவில் தொற்று பரவல் மிகவும் அதிகரித்துள்ளது. எனினும் அவர்கள் சரியான தரவுகளை அங்கிருந்து முழுமையான பெற்றுக்கொள்ள முயவில்லை. இந்நிலையில் ஒரு சில நாடுகள் தங்கள் மக்களை பாதுகாக்கும் முகமாக முன்னெடுத்துள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளை பாராட்டுவதாக தெரிவித்துள்ளார்.

'சீன பயணிகள் மீதான கட்டுப்பாடு நல்லது' - உலக சுகாதார அமைப்பு!

Social Share
FacebookTwitterLinkedinWhatsappInstagramViberTelegramFacebook MessengerGmailPinboardSkype
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version