கனடா முன்னாள் ஜனாதிபதிகளான ராஜபக்ஷ சகோதர்கள் அடங்கிய நால்வரின் தடைக்கு முன்னாள் அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தனது அதிருப்தியினை வெளியிட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் மகனான நாமல் “LTTE சிறுவர்களை போர்களில் ஈடுபடுத்தினர், மூவின மக்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகளை கொண்டனர். மூன்று தசாப்தங்களாக நடைபெற்ற இந்த கொடுமையினை நிறைவுக்கு இலங்கை கொண்டு வந்தது. தடை தொடர்பில் கனடா அரசாங்கத்துக்கு முடிவெடுக்கும் உரிமை உண்டு. ஆனாலும் காலம் தாழ்த்தி மறைமுக திட்டங்களுக்காக முடிவு எடுக்க கூடாது” என குற்றம் சுமத்தியுள்ளார்
