அளுத்கம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட களுவாமோதர பாலத்தில் இன்று (12) காலை பாரிய விபத்து ஏற்பட்டுள்ளது.
மாத்தறையில் இருந்து கொழும்பு நோக்கி வந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தை, அதற்கு பின்னால் வந்த பெலியத்த – கொழும்பு பயணிகள் போக்குவரத்து பேருந்து பாலத்திற்கு மேல், பாதுகாப்பற்ற முறையில் முந்தி செல்ல முற்பட்ட போது முன்னால் வந்த முச்சக்கர வண்டியுடன் மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
சம்பவத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த இருவர் படுகாயமடைந்து களுத்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்தையடுத்து பேருந்தின் சாரதியும் நடத்துனரும் அந்த இடத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக அளுத்கம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்து காரணமாக காலி-கொழும்பு பிரதான வீதியின் களுவாமோதர பிரதேசத்தில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டிருந்தது.
இந்த விபத்து தொடர்பில் அளுத்கம பொலிஸ் போக்குவரத்து பிரிவு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
