உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதலை தடுக்க தவறியவர்களாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன, அப்போதைய பாதுகாப்பு செயலாளர் ஹேமஸ்ரீ பெர்னாண்டோ, முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, முன்னாள் உதவி பொலிஸ் மா அதிபர் நிலந்த ஜயவர்தன, தேசிய புலனாய்வு துறை பொறுப்பதிகாரி சிசிர மென்டிஸ் ஆகியோர் உயர் நீதிமன்றத்தினால் உறுதி செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த குற்றத்துக்காக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன 10 கோடி ரூபா, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமஸ்ரீ பெர்னாண்டோ5 கோடி ரூபா, முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் உதவி பொலிஸ் மா அதிபர் நிலந்த ஜயவர்தன ஆகியோர் 5 கோடி ரூபா, தேசிய புலனாய்வு துறை பொறுப்பதிகாரி சிசிர மென்டிஸ் 1 கோடி ரூபாவினை பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்ட ஈடாக வழங்க வேண்டுமென நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் அடிப்படை உரிமைகளை இந்த பிரதிவாதிகள் மீறியுள்ளதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான ஏழு பேரடங்கிய நீதிபதிகள் குழு இந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற குண்டு தாக்குதல் தொடர்பில் தகவல் கிடைத்தும் அதனை தடுக்க தவறியமைக்காக இந்த தீர்ப்பை வழங்கியது.
