வவுனியாவில் இன்று முதல் புதிய ஹோட்டல்

வவுனியா நகரை அண்மித்த பகுதியில் ஹபானா விலேஜ் எனும் பெயரில் தங்குமிட வசதியினை கொண்ட புதிய ஹோட்டல் திறக்கப்பட்டுள்ளது. இலக்கம் 283, 12ம் ஒழுங்கை, கண்டி வீதி வவுனியாவில், திறந்த பலக்லைக்கழகத்துக்கு அருகிலுள்ள வீதியில் இந்த நிறுவனம் திறக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே க்ரீன் பார்க் ரிசோர்ட் எனும் பெயரில் தங்குமிட வசதி, உணவு மற்றும் திருமண மண்டபத்துடன் இயங்கும் நிறுவனத்தின் உரிமையாளர் ஜெனகனின் மேற்பார்வையில், அவரின் சகோதரர் சுபாஷ் இன்று (04.10) இந்த புதிய நிறுவனத்தை ஆரம்பித்து வைத்துள்ளார்.

கொவிட் சுகாதர முறைக்கு உட்பட்டு குடும்ப அங்கத்தவர்கள் மற்றும் குறிப்பிட்ட சிலரின் பங்குபற்றுதலோடு இன்று வைபவ ரீதியா இந்த நிறுவனம் திறந்து வைக்கப்பட்டது.

Social Share
FacebookTwitterLinkedinWhatsappInstagramViberTelegramFacebook MessengerGmailPinboardSkype
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version