உக்ரைனில் உள்ள பிரபல உப்பு உற்பத்தி நகரமான சோலோடரை ரஷ்யா தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது.
நீண்ட போருக்குப் பிறகு ரஷ்யாவால் இந்த நகர் கைப்பற்றப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
சோலோடர் நகர் கையகப்படுத்தப்பட்டதன் காரணமாக, அதன் அருகிலுள்ள பக்ஹ்முட் (Bakhmut) நகரத்தில் தங்கள் அதிகாரத்தை நிலைநிறுத்துவது மிகவும் எளிதானது என்று ரஷ்ய பாதுகாப்புப் படைகள் தெரிவித்துள்ளன.
எவ்வாறாயினும், சோலோடர் நகரை ரஷ்யா கைப்பற்றியுள்ளதாக வெளியான செய்திகள் பொய்யானது எனவும், அங்கு தொடர்ந்தும் போர் நடைபெற்று வருவதாக உக்ரைன் தெரிவித்துள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.