‘பட்டத் திருவிழா’ 2023!

விக்னேஸ்வரா சனசமூக சேவா நிலையத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறையில் தமிழர் திருநாளான தைப்பொங்கல் தினத்தினை முன்னிட்டு ஆண்டுதோறும் இடம்பெறும் ராட்சத, விசித்திர ‘பட்டத் திருவிழா’ நேற்று ஞாயிற்றுக்கிழமை (15.01) வல்வெட்டித்துறை உதயசூரியன் உல்லாச கடற்கரையில் சிறப்பாக இடம்பெற்றது.

இதன்போது, போட்டியாளர்கள் பல வண்ணங்களில் விசித்திரமான பட்டங்கள் செய்து, போட்டியில் பங்குபற்றினர்.

இதில் உருமாறும் மர்ம தாக்குதல் விமானத்தை போன்ற பட்டத்தினை செய்த ம.ஹாசன் என்பவர் முதலாம் இடத்தை பெற்றுக்கொண்டார்.
இவர் இந்த போட்டியில் 6ஆவது தடவையாக முதலாம் இடத்தை பெற்றுள்ளார் என்பது சிறப்பம்சமாகும்.

உழவு இயந்திரம், மரநடுகை திட்டத்தை போன்று பட்டம் அமைத்த ம. பிரசாந் என்பவர் இரண்டாம் இடத்தினை பெற்றுக்கொண்டார்.

இந்த போட்டியில் மூன்றாம் இடத்தினை மேள தாளங்களுடன் கூடிய ஆகாய விசித்திர போர்க்கள அரங்கம் போன்று பட்டத்தை அமைத்த நிரோசன் சின்னா என்பவர் பெற்றுக்கொண்டார்.

முதல் மூன்று இடங்களை பெற்றவர்களுக்கு சிறப்புப் பரிசுகளும், பட்டப் போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் பரிசில்கள் வழங்கப்பட்டன.

‘பட்டத் திருவிழா' 2023!

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version