எரிபொருள் விநியோகம் செய்வதற்கான நடைமுறையிலுள்ள QR முறையினை மீறி விநியோகம் செய்யும் எரிபொருள் விநியோக நிலையங்களின் அனுமதி இரத்து செய்யப்படுமென வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜயசேகர அறிவித்துள்ளார்.
நேற்று(16.01) QR நடைமுறை தொடர்பிலான முன்னேற்ற கூட்டம் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன அதிகாரிகளோடு நடைபெற்றது. இதன் போது QR முறையினை மீறி பல எரிபொருள் நிலையங்கள் எரிபொருள் வழங்குவதாக அதிகாரிகள் அமைச்சரிடம் முறையிட்டுள்ளனர்,. அதன் போதே இந்த அறிவிப்பை அமைச்சர் விடுத்துள்ளார்.
