ICC U 19 மகளிர் உலககிண்ணம் – இந்தியா முதலிடம், இலங்கை போராடி தோல்வி.

19 வயதுக்குற்பட்ட பெண்களுக்கான ICC T20 உலக கிண்ண போட்டிகளில் நேற்று(16.11) இரண்டாவது நாளாக நடைபெற்றது.

10 வது போட்டியில் குழு A அணிகளான இலங்கை மற்றும் பங்களாதேஸ் அணிகள் மோதியிருந்தன. நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணித்தலைவி விஷ்மி குணரட்ன களத்தடுப்பினை தேர்வு செய்தார்.

முதலில் துடுப்பேடுத்தாடிய பங்களாதேஸ் அணியின் அபிபா ஹுமரியாப்ரோட்டாஷா மற்றும் ஷொர்னா அக்டெர் இன் அரைச்சதத்துடன் 20 ஓவர்களில் 02 விக்கெட்களை இழந்து 165 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

அபிபா ஹுமரியாப்ரோட்டாஷா 53(43) ஓட்டங்களையும், ஷொர்னா அக்டெர் ஆட்டமிழக்காது 50(28) ஒட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். பந்துவீச்சில் ராஷ்மி நேர்த்திராஞ்சலி மாத்திரம் ஒரு விக்கெட்டினை கைப்பற்றினார்.

பதிலுக்கு துடுப்பாடிய இலங்கை அணி 20 ஓவர்களில் 04 விக்கெட்களை இழந்து 155 ஓட்டங்களை பெற்று 10 ஒட்டங்களினால் தோல்வியடைந்தது.

இலங்கை அணியின் தலைவர் விஷ்மி குணரட்ன தேவ்மி விதானகே இன் அரைச்சதத்துடன் வெற்றிக்காக இலங்கை அணி கடுமையாக பேரடியது. தேவ்மி விதானகே 44 பந்துகளில் 55 ஒட்டங்களையும் விஷ்மி குணரட்ன ஆட்டமிழக்காது 54 பந்துகளில் 60 ஒட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். பந்துவீச்சில் மறுபா அக்டெர் இரண்டு விக்கெட்களையும், டிஸா பீஷ்வாசிஸ் ஓரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

போட்டியின் ஆட்ட நாயகியாக பங்களாதேஸ் அணியின் அபிபா ஹுமரியா ப்ரோட்டாஷா தெரிவுசெய்யபட்டார்.

குறித்த போட்டியில் இலங்கை அணி தோல்வியடைந்தமையினால் அடுத்து இடம்பெறும் அவுஸ்திரேலியா அணியுடனான போட்டியில் கட்டாயம் வெற்றி பெறவேண்டிய கட்டாய நிலைக்கு இலங்கை அணி தள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை இந்திய 19 வயதுக்குற்பட்டஅணி இரண்டாவது வெற்றியினை பெற்றதன் மூலம் முதலிடத்தை தனதாக்கி கொண்டது.

09 வது போட்டியில் குழு D அணிகளான இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரக அணிகள் மோதியிருந்தன. நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ஐக்கிய அரபு அமீரக அணித்தலைவி தீர்த்தா சதீஷ் களத்தடுப்பினை தெரிவு செய்தார்.

இந்திய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீராங்கனைகளான ஷெஹரவத் சஞ்சய், மற்றும் ஷாபாலி வெர்மா சிறப்பான துடுப்பாட்டத்தினை வெளிப்படுத்தியிருந்தனர். முதலாவது விக்கெட்டுக்காக 111 ஒட்டங்களை பெற்றிருந்த சந்தர்ப்பத்தில் ஷாபாலி வெர்மா 34 பந்துகளில் 78 ஓட்டங்களை பெற்று வெளியேறியிருந்தார். அவரை தொடர்ந்து வந்தரிச்சா ஹோஷ் 29 பந்துகளில் 49 ஓட்டங்களை பெற்று வெளியேறினார். ஷெஹரவத் இறுதிவரை ஆட்டமிழக்காது 49 பந்துகளில் 74 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க இந்திய அணி 03 விக்கெட்களை இழந்து 219 ஓட்டங்களை குவித்தது. பந்துவீச்சில் இந்துஜா நந்தகுமார், மஹிகா கோர், சமைரா தர்னி, இந்துஜா நந்தகுமார், மஹிகாக கோர், சமாரிய தர்நிதற்கா ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டினை வீழ்த்தினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடியா ஐக்கிய அரபு அமீரக அணி 20 ஓவர்கள் முடிவில் 05 விக்கெட்களை இழந்து 97 ஓட்டங்களை மாத்திரமே பெற்று 122 ஒட்டங்களினால் தோல்வியை தழுவிக்கொண்டது.

துடுப்பாட்டத்தில் மஹிகா கோர் 26 ஒட்டங்களையும், லாவன்யா கெனி 24 ஒட்டங்களையும் பெற்றுக்கொள்ள பந்துவீச்சில் ஷப்னம், டிட்டஸ் சது, மன்னட் கசியாப், பர்ஷவி சொப்ரா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினை கைப்பற்றினர்.

போட்டியின் ஆட்ட நாயகியாக ஷிபாலி வெர்மா தெரிவுசெய்யப்பட்டார்.

இன்றய போட்டியில் வெற்றிபெற்ற இந்திய அணி தனது இரண்டாவது குழுநிலை போட்டியில் வெற்றிபெற்று 04 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

-ரவிநாத்-

ICC U 19 மகளிர் உலககிண்ணம் - இந்தியா முதலிடம், இலங்கை போராடி தோல்வி.
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version