வவுனியாவில் ஐக்கிய மக்கள் சக்தி கட்டுப்பணம் செலுத்தியது

2023 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக ஐக்கிய மக்கள் சக்தி வவுனியா மாவட்டத்தில் இன்று 17.01 கட்டுப்பணம் செலுத்தியுள்ளது.

சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் மாவட்ட அமைப்பாளர்களான ரோ.ரசிகா மற்றும் நிரோஸ் ஆகியோரின் தலைமையில் வவுனியா மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள தேர்தல் அலுவலகத்தில் தமது கட்டுப்பணத்தை செலுத்தியிருந்தனர்.

வவுனியா மாநகரசபை உட்பட 5 உள்ளுராட்சி மன்றங்களிலும் போட்டியிடுவதற்காகவே இவ்வாறு கட்டுப்பணம் செலுத்தப்பட்டது. இதன்போது கட்சியின் அமைப்பாளர்களுடன் வேட்பாளர்கள், ஆதரவாளர்கள் எனப் பலரும் பிரசன்னமாகியிருந்தனர்.

ஐக்கிய மக்கள் சக்தியின் இளைஞர் அணியின் உபதலைவர், மற்றும் முல்லைத்தீவு மாவட்ட அமைப்பாளர் லக்ஷயன் முத்துக்குமுராசுவாமியும் கட்டுப்பணத்தம் செலுத்துவதற்காக வவுனியா அங்கத்தவர்களுடன் சென்றிருந்தார்.

வவுனியாவில் ஐக்கிய மக்கள் சக்தி கட்டுப்பணம் செலுத்தியது
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version