விருதுபெற்ற குமார் நடேசனுக்கு வாழ்த்து

இந்தியா, சென்னையில் இடம்பெற்ற 9ஆவது உலகத்தமிழ் வம்சாவளி மாநாட்டில், ஊடகத்துறையில் ஜனநாயகத்தைப் போற்றி பாதுகாக்கும் பாரம்பரிய ஊடகமான வீரகேசரியின் சேவையைப் பாராட்டி, அதன் முகாமைத்துவப் பணிப்பாளரான குமார் நடேசனுக்கு சாதனை தமிழன் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது.

இந்த நிலையில் ஐக்கிய தேசிய கட்சியின் இரத்தினபுரி அமைப்பாளருமான சு.ஆனந்த குமார் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

“சாதனை தமிழன் நடேசன் ஐயா ஆசிரியருக்கு வாழ்த்துக்கள். அவரைப் போன்றவர்கள் இல்லையென்றால் ஊடகத்துறையில் ஜனநாயகத்தை நிலை நாட்டி எங்களை போன்றோர் அரசியலில் வருவது என்பது பெரும் சவாலாக இருந்திருக்கும். இந்த சாதனை விருந்து இலங்கை ஜனநாகத்திற்கும், தமிழர்களுக்கும் கிடைக்கப்பெற்ற கௌரவ விருந்து” என அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

“சென்னையில் இடம்பெற்ற 9ஆவது உலகத்தமிழ் வம்சாவளி மாநாட்டில், ஊடகத்துறையில் ஜனநாயகத்தைப் போற்றி பாதுகாக்கும் பாரம்பரிய ஊடகமான வீரகேசரியின் சேவையைப் பாராட்டி, அதன் முகாமைத்துவப் பணிப்பாளரான குமார் நடேசன் ஐயா அவர்களுக்கு சாதனை தமிழன் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது இலங்கை தமிழர்கள் அனைவருக்கும் கிடைக்கப்பெற்ற மாபெரும் வெற்றியாகவே நாம் பார்க்க வேண்டும்” என ஆனந்த குமார் அவரின் வாழ்த்துச் செய்தியில் மேலும் கூறியுள்ளார்.

விருதுபெற்ற குமார் நடேசனுக்கு வாழ்த்து
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version