பாணந்துறை பிரதேசத்தில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட தகராறில் மோதரவில அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீடொன்று தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளதாக பாணந்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த தீ விபத்தில் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை என்றும், சொத்து சேதம் இதுவரை கணக்கிடப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று (17.01) பிற்பகல் பாணந்துறை ஜனப்ரிய வீதியில் பணத் தகராறு காரணமாக இரு குழுக்களுக்கிடையில் மோதல் ஏற்பட்டதாகவும், இந்த மோதலில் பாதிக்கப்பட்ட இருவர் பாணந்துறை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அந்த தாக்குதலின் அடிப்படையில் நேற்று இரவு 10.30 மணியளவில் மொதரவில அடுக்குமாடி குடியிருப்பில் மூன்றாவது மாடியில் உள்ள வீடொன்றுக்கு இனந்தெரியாத குழுவொன்று தீ வைத்துள்ளமை இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒதெரிவித்துள்ளார்.
மொரட்டுவை மாநகரசபையின் தீயணைப்பு வாகனம் வந்து பிரதேசவாசிகளின் உதவியுடன் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த போதிலும், இந்த சம்பவம் அதிக சேதத்தை ஏற்படுத்தியதாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் காயமடைந்தவர்கள் பாணந்துறை ஆரம்ப வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இந்த மோதல் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
