சிலம்பம் பரீட்சசை மற்றும் பட்டி வழங்கும் நிகழ்வு

தமிழர்களின் பாரம்பரிய கலையான சிலம்பம் பரீட்சை மற்றும் தரப்பட்டி, சான்றிதழ் வழங்கும் நிகழ்வு வி மீடியா ஊடக பங்களிப்புடன் நாளை மறுதினம்(22.01) யாழ்ப்பாணம் கொக்குவில் வளர்மதி மண்டபத்தில் நடைபெறவுள்ளது. காலை 10 மணிக்கு பரீட்சைகள் ஆரம்பிக்கவுள்ளன. பிற்பகல் 1 மணி முதல் தரப்பட்டி மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நடைபெறவுள்ளது. சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் அனைவரும் கலந்து கொண்டு தமிழரின் பாரம்பரிய கலையான சிலம்பத்துக்கு உங்களது ஆதரவை வழங்குமாறு வி மீடியா அழைக்கிறது.

தமிழர்களின் பாரம்பரிய கலையான சிலம்பகலையை “சிவலீமன் சிலம்பம் இன்ரர் நசனல் (Sivaleeman Chilambam International) கலைக் கழகத்தின் தலைவரும், குருவும் ஆகிய சூ. யசோதரன் (ஆசான் பாபு / Babu Master) அவர்களால் வட மாகாணம் எங்கும் பயிற்றுவிக்கப்படுகின்றது.

அதன் முதலாவது தரப் பரீட்சை எதிர்வரும் 22.01.2023, ஞாயிறு காலை 10.00 மணிக்கு கொக்குவில் வளர்மதி முன்னேற்றக் கழகம் / சனசமுக நிலைய மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

வடமாகாணத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் 100க்கும் அதிகமான மாணவர்கள் பங்குபற்றவுள்ள இந்நிகழ்வின் இறுதியில் பங்குபற்றிய மாணவர்களுக்கு தரப்பட்டி, சான்றிதழ், விருதுகள் (Belt, Certificate and award) ஆகியவையும் வழங்கப்படவுள்ளன.

சிலம்பம் பரீட்சசை மற்றும் பட்டி வழங்கும் நிகழ்வு
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version