இளம் பெண்ணை கொலை செய்த மாணவனின் அதிர்ச்சி தரும் வாக்குமூலம்!

கடந்த செவ்வாய்கிழமையன்று பல்கலைக்கழக மாணவியொருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர் பொலிஸாரிடம் வாக்குமூலமளிக்கையில் சம்பவம் தொடர்பிலான திடுக்கிடும் பல தகவல்களை வெளியிட்டுள்ளார்.

மருத்துவ பீடத்தில் கல்வி கற்கும் சந்தேக நபரான பசிது சதுரங்க என்பவரே இவ்வாறு பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

“ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் உனக்கு ஒரு இன்ப அதிர்ச்சி தருவதாக கூறி அவளது கண்களை மூடிக்கொண்டு கழுத்தை அறுத்தேன்,” என்று அவர் பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.

“ஒரு முக்கியமான விடயம் பேச வேண்டும் என்று கூறி அவளை கொழும்பு ரேஸ்கோர்ஸுக்கு அழைத்து வந்தேன். அங்கு, “நான் அவளுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி தருகிறேன் என்று கூறி கண்களை காட்டினேன், அதன் பிறகு அவள் கழுத்தை அறுத்தேன்” என்று சம்பவத்தை விவரித்துள்ளார்.

மேலும் அவர் வழங்கிய வாக்குமூலத்தில் கூறப்பட்டுள்ளதாவது,

“சுட்டி (பாதிக்கப்பட்ட பெண்) எனக்கு மனநோய் என்று எப்பொழுதும் என்னைக் குற்றம் சாட்டினாள். அதனால்தான் எனக்கு கவலை ஏற்பட்டது. அவசரமாக முக்கியமான விடயம் பற்றி பேச வேண்டும் என்று சுட்டியை ரேஸ்கோர்ஸுக்கு அழைத்து வந்தேன். நான் ஒரு மாதமாக அவளைக் கொல்ல திட்டமிட்டிருந்தேன். எதிர்காலத்தில் அவள் வேறொருவருடன் தொடர்பு வைத்திருப்பதை நான் பார்க்க விரும்பவில்லை,” என்று தெரிவித்துள்ளார்.

“2019 முதல் நான் ஒரு மனநோய்காக மருந்து எடுத்து வருகிறேன். நான் 2020 இல் சுட்டியுடன் காதல் உறவை ஆரம்பித்தேன். நான் மருந்து சாப்பிடுகிறேன் என்று அவளிடம் சொல்லவில்லை. ஆனால் நான்கைந்து மாதங்களுக்கு முன்புதான் அவளுக்கு அது தெரிய வந்தது. பின்னர் அவள் எங்கள் உறவை நிறுத்த விரும்பினாள், அவள் அதை செய்தாள்.”

“அதன் பிறகு, அவள் முற்றிலும் மாறிவிட்டாள். அவள் தொடர்ந்து என்னை ‘பிஸ்ஸா’ (பைத்தியம் அல்லது மனநலம் பாதிக்கப்பட்டவன்) என்று அழைத்தாள். வேறொரு உறவின் காரணமாக அவள் மாறிவிட்டாளா என்று தேடி பார்த்தேன். ஆனால் அவளுக்கு அத்தகைய தொடர்பு இல்லை. அவள் மீது எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. அவள் எப்போதும் என்னை பைத்தியக்காரன் என்று அழைப்பதால் நான் அவளுடன் கோபத்தில் இருந்தேன்”.

“பிறகு அவள் வேறு யாருடனும் பழகுவதை பார்க்க நான் விரும்பவில்லை என்பதால் நான் அவளைக் கொல்ல திட்டமிட்டேன்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை வெல்லம்பிட்டி சந்தியில் இருந்து கத்தி ஒன்றை வாங்கினேன். கடந்த செவ்வாய்கிழமை அந்த கத்தியை என் பையில் வைத்துக்கொண்டு என் வீட்டை விட்டு வெளியேறினேன் . காலையில் முதல் விரிவுரையில் கலந்து கொண்ட பிறகு, நான் ஒரு முக்கிய விடயம் சொல்ல வேண்டும் என்று கூறி அவளை ரேஸ்கோர்ஸுக்கு வரச் சொன்னேன், ”.

“முதலில் அவள் மறுத்துவிட்டாள், பின்னர் நான் அவளை வற்புறுத்தியதால் அவள் ஒப்புக்கொண்டாள். இருவரும் ரேஸ்கோர்ஸ் நோக்கி நடந்தோம். குளத்திற்கு அருகில் நின்று பேசினோம். அப்போதும் அவள் மீது எனக்கு கோபம் இருந்தது. நான் அவளிடம் உனக்காக ஒரு இன்ப அதிர்ச்சி இருப்பதாகச் சொன்னேன், பிறகு அவளை ரேஸ்கோர்ஸ் ஸ்கோர்போர்டுக்கு அருகில் அழைத்து வந்தேன்” .

“அங்கே நான் அவளுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி இருக்கிறது என்று சொல்லி அவள் கண்களை கட்டினேன். என்ன இன்ப அதிர்ச்சி என்று மீண்டும் கேட்டாள். பின்னர் கத்தியால் அவள் கழுத்தை அறுத்தேன். அவள் அலறிக் கொண்டு, தன் கண்களை மூடியிருந்த துணியை கழற்றிவிட்டு உதவிக்காக அலறினாள். நான் அவளை மீண்டும் குத்தினேன். அருகில் சில பெண்கள் இருந்தார்கள், அவர்கள் அந்த இடத்திற்கு வருவார்கள் என்று பயந்து, நான் அங்கிருந்து ஓடினேன். சம்பவ இடத்திலிருந்து ஓடிய பின் நேராக பேருந்தில் ஏறி, ரயிலில் பாய்ந்துவிட வேண்டும் என்று நினைத்து வெல்லம்பிட்டிக்கு சென்றேன். ஆனால் நீண்ட நேரம் காத்திருந்தும் ரயில் வரவில்லை. வீட்டிற்குச் சென்று எனது பைகள் மற்றும் பொருட்களை வீட்டில் வைத்துவிட்டு எனது வாழ்க்கையையும் முடித்துக்கொள்ளலாம் என்று இரண்டு முறை களனி ஆற்றில் குதித்தேன், ஆனால் அந்த முயற்சிகளும் தோல்வியடைந்தன. அப்போதுதான் போலீசார் என்னை கைது செய்தார்கள்.

கடந்த செவ்வாய்க்கிழமை கொழும்பு பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடத்தில் மூன்றாம் ஆண்டில் கற்கும் சதுர்த்தி ஹன்சிகா மல்லகராச்சி (24 வயது) கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டதன் பின்னணியில், அவரது காதலன் என நம்பப்படும், கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் வழங்கிய வாக்குமூலம் இது.

இளம் பெண்ணை கொலை செய்த மாணவனின் அதிர்ச்சி தரும் வாக்குமூலம்!
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version