ஜூன் மாதத்திற்குள் முட்டை தட்டுப்பாடிற்கு தீர்வு!

நாட்டில் தற்போது நிலவி வரும் முட்டை தட்டுப்பாடானது எதிர்வரும் ஜூன் மாதத்திற்குள் முடிவுக்கு வரும் என்று வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பிரியங்கா அதபத்து தெரிவித்துள்ளார்.

இதன்படி, நாட்டில் தற்போது 3 மில்லியன் முட்டைகளுக்கு தட்டுப்பாடு நிலவி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, முட்டைக்கான அதிகூடிய சில்லறை விலைகளை நிர்ணயித்து நுகர்வோர் விவகார அதிகார சபை நேற்று நள்ளிரவு (20.01) வர்த்தமானி அறிவித்தலொன்றை வெளியிட்டிருந்தது.

அதன்படி,வெள்ளை முட்டை ஒன்றின் சில்லறை விலை 44 ரூபாவாகவும் சிவப்பு முட்டை ஒன்றின் சில்லறை விலை 46 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஜூன் மாதத்திற்குள் முட்டை தட்டுப்பாடிற்கு தீர்வு!
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version