மரண தண்டனை பெற்ற கைதி ஒருவர் உயர்தர பரீட்சைக்கு எழுதவுள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த கைதி சிறைவாசத்தின் போது “அனுஷ்ய ஆஸவ ” என்ற நாவலையும் எழுதியுள்ளார்.
இவருடன் வெலிக்கடை சிறையில் உள்ள நான்கு கைதிகள் 2022/23ம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை எழுதவுள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும், யாழ்ப்பாண சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர் ஒருவரும் இவ்வருடம் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
