கொழும்பு, பம்பலபிட்டியவில் அமைந்திருக்கும் ஹவுஸ் ஒப் பஷன் ஆடை விற்பனை நிலைய ஊழியர்களுக்கும், வாடிக்கையாளர் ஒருவருக்குமிடையில் நேற்று முன் தினம்(23.01) மோதல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவத்தில் நிறுவன ஊழியர்கள் சிலரும், குறித்த வாடிக்கையாளரும் மோதலில் ஈடுபட்டமை சமூக வலைத்தளங்கள் மூலமாக வீடியோ காட்சியாக வெளிவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
குறித்த நிறுவனத்துக்கு வருகை தந்த வாடிக்கையாளர் ஒருவர், தனது காரினை இன்னுமொரு கார் எடுக்க முடியாத வகையில் நிறுத்தி விட்டு சென்றதாகவும், அதனை எடுக்குமாறு பல முறை அறிவித்தல் வழங்கியதாகவும், தொடர் அறிவித்தல்கள் காரணமாக எரிச்சலடைந்த வாடிக்கையாளர் முகாமையாளருடன் முரண்பட்டுக்கொண்ட நிலையில் முரண்பாடு கைகலப்பாக மாறியதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுளளது. இருப்பினும் அவ்வாறு வெளியிடப்பட்ட செய்தி ட்விட்டர் தளத்தில் சம்பவத்துடன் தொடர்புடைய வீடியோவின் பதிலாக ஒரு தனி நபரினால் வெளியிடப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் பொலிஸ் விசாரணைகளின் அடிப்படையிலான தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
குறித்த நிறுவனத்தின் ஊழியர்கள் வாடிக்கையாளர்களுடன் மோசமாகவே நடந்து வருவதாக இந்த வீடியோவுக்கான பின்னூட்டங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
