வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் புதிய தீர்மானம்!

நாட்டிலிருந்து வீட்டு பராமரிப்பு உதவியாளர் பணிகளுக்காக முதல் தடவையாக வெளிநாடு செல்லும் பெண்களுக்கு வழங்கப்படும் பயிற்சி நெறியை நீடிக்க வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தீர்மானித்துள்ளது.

இந்த ஆண்டு பெப்ரவரி 1ம் திகதி ஆரம்பமாகவுள்ள NVQ நிலை 3 உடன் 15 நாள் பயிற்சி நெறி 28 நாட்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஏப்ரல் 1ம் திகதி முதல், வீடு பணிப்பெண் உதவியாளர் பணிக்கு வெளிநாடு செல்லும் பெண்கள், பணியகப் பயிற்சியுடன் கூடிய உயர் மதிப்புடைய NVQ 3 சான்றிதழுடன் பணியகப் பதிவுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை பணியகப் பயிற்சி பெற்ற பெண்களுக்கும் 2023 ஜனவரி 31 அல்லது அதற்கு முன் பயிற்சியை முடித்த பெண்களுக்கும் இந்த நிபந்தனை பொருந்தாது என்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

சர்வதேச தரத்திற்கு ஏற்ப நன்கு பயிற்சி பெற்ற ஊழியர்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்கான பயிற்சி வகுப்புகளின் தரத்தை அதிகரிக்க வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் புதிய தீர்மானம்!
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version