ஜப்பான் கடற்பரப்பில் சரக்கு கப்பல் ஒன்று மூழ்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஜப்பானிய கரையோர காவல்படையினர் கப்பலிலிருந்த பணியாளர்களில் 13 பேரை மீட்டுள்ளதுடன் மேலும் 09 பேரை தேடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
6,551 டொன் எடை கொண்ட “ஜிண்டியன்” என்ற கப்பல் ஜப்பானின் நாகசாகி கடற்பரப்பில் ஆழ்கடலில் மூழ்கியுள்ளது.
ஹோங்காங்கில் பதிவு செய்யப்பட்ட அந்த கப்பலில் 14 சீன பிரஜைகளும் 08 மியான்மர் பிரஜைகளும் பணிபுரிந்தாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
