தேர்தல்கள் ஆணைக்குழுவின் அங்கத்தவர் திருமதி P.M சார்ள்ஸ் பதவி விலகியது தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு பாதிப்புகளை ஏற்படுத்தாது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய கூறியுள்ளார்.
நேற்று(25.01) திருமதி சார்ள்ஸ் தனது பதவி விலகலுக்கான கடிதத்தை ஜனதிபதிக்கு கையளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையிலேயே மஹிந்த தேசப்பிரிய இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.
தேர்தல்கள் ஆணைக்குழுவினை நடாத்தி செல்வதற்கு மூன்று உறுப்பினர்கள் போதும் எனவும், தேர்தல்கள் ஆணைக்குழுவினை நடாத்தி செல்வதற்கான கோரம் 03 பேரெனவும் அவர் கருத்து வளியிட்டுள்ளார். அத்தோடு தலைவர் சமூகமளிக்காவிட்டால் மூன்று அங்கத்தவர்களில் ஒருவரை தலைவராக நியமித்து பணிகளை செய்து கொள்ள முடியுமெனவும் அவர் மேலும் கூறியுள்ளார். இதுவே அரசமைப்பு சட்ட திட்டங்கள் என தெளிவுபடுத்தியுள்ளார்.
அங்கத்தவர்களது பதவி வெற்றிடம் காணப்பட்டாலும் தேர்தல்கள் ஆணைக்குழு தனது பணிகளை தொடர்நது செய்ய முடியுமெனவும் மஹிந்த தேசப்பிரிய கூறியுள்ளார்.
