ரீயூனியன் தீவில் கைது செய்யப்பட்ட இலங்கையர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்!

பிரான்சின் ரீயூனியன் தீவில் கைது செய்யப்பட்ட 38 சட்டவிரோத இலங்கை குடியேற்றவாசிகள் நேற்று இரவு இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

கடந்த ஜனவரி 14ம் திகதி இவர்கள் கடல் வழியாக ரீயூனியன் தீவிற்குள் சட்டவிரோதமாக உள்நுழைய முற்பட்ட போது ரீயூனியன் தீவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.

இவர்கள் அனைவரும் ரீயூனியன் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர், நேற்று (26,01)புதன்கிழமை இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.

இவர்கள் யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு புத்தளம், நீர்கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதேவேளை, குறித்த நபர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

ரீயூனியன் தீவிற்குள் மக்கள் சட்டவிரோதமாக உள்நுழைவதை பிரெஞ்சு அரசாங்கம் விரும்பாத காரணத்தால், இதுபோன்ற சட்டவிரோத பயணங்களை தவிர்க்குமாறும், தரகர்களிடம் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் எனவும் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version