ரயிலுடன் முச்சக்கரவண்டி மோதியதில் ஒருவர் பலி!

கொழும்பில் இருந்து கண்டி நோக்கி பயணித்த புகையிரதத்துடன் முச்சக்கர வண்டி மோதியதில் முச்சக்கரவண்டியின் சாரதி உயிரிழந்துள்ளார்.

பொத்தேமுல்ல பிரதேசத்தை சேர்ந்த 41 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மீரிகம விஜயராஜதஹன புகையிரத கடவையில் நேற்று (26.01) இரவு இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

சடலம் வட்டுப்பிட்டிவல வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மீரிகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

ரயிலுடன் முச்சக்கரவண்டி மோதியதில் ஒருவர் பலி!

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version