உஸ்பெகிஸ்தான் ஏர்வேஸ், மத்தல ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்திற்கான முதல் விமான சேவையை இன்று ஆரம்பித்துள்ளதாக மத்தல ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தின் முகாமையாளர் தெரிவித்துள்ளார்.
113 பயணிகளுடன் காலை 9.30 மணிக்கு விமான நிலையத்தை வந்தடைந்த விமானம் சம்பிரதாய பூர்வமாக பயணிகள் வரவேற்கப்பட்டது.
இன்று முதல் ஒவ்வொரு வாரமும் உஸ்பெகிஸ்தான் மற்றும் மத்தல ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையம் ஊடாக வாராந்தம் விமான பயணத்தை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கடந்த டிசெம்பர் மாதம் டுபாயில் நடைபெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்து இந்த விமான சேவை இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
