ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் செயலாளர் நாயகம் பான் கீ மூன் அடுத்த மாதம் முதல் வாரத்தில் இலங்கைக்கு விஜயம் செய்ய திட்டமிட்டுள்ளார்.
அதன்படி, எதிர்வரும் பெப்ரவரி மாதம் 6ம் திகதி நாட்டிற்கு வரும் பான் கீ மூன், நிலையான அபிவிருத்தி மற்றும் காலநிலை மாற்றம் தொடர்பான பல ஒப்பந்தங்களில் கைச்சாத்திடவுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அழைப்பின் பேரில் பான் கீ மூன் இலங்கைக்கு வருகை தரவுள்ளதுடன் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 7ம் திகதி ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடுவதற்கும் திட்டமிட்டுள்ளார்.
அவர் தற்போது தென் கொரிய அரசு நிறுவனமான குளோபல் கிரீன் டெவலப்மென்ட் இன்ஸ்டிட்யூடின் தலைவராக பணியாற்றி வருகின்றார். அந்த நிறுவனத்தின் தலைவர் என்ற முறையில் இலங்கையில் அது தொடர்பான சில ஒப்பந்தங்களில் கையெழுத்திடவுள்ளார்.
இந்த சந்திப்பின்போது நாட்டில் நிறுவ உத்தேசிக்கப்பட்டுள்ள காலநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச பல்கலைக்கழகம் தொடர்பிலும் கலந்துரையாட திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த உடன்படிக்கைகளுக்கு அமைய கொரியாவுடன் இணைந்து இது தொடர்பான திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
