வளிமண்டலவியல் திணைக்களத்தின் விசேட அறிவிப்பு!

தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்பு உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதன்காரணமாக எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்கு குறித்த கடற்பரப்புக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என கடற்றொழிலாளர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

குறித்த கடற்பரப்புகளில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பின் உடனடியாக கரையோரப் பாதுகாப்பான இடத்திற்கு வருமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தென்மேற்கு வங்காள விரிகுடா கடல் பகுதியில் எதிர்வரும் 31ம் திகதி அளவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகி, பெப்ரவரி மாதம் 1ம் திகதி நாட்டின் கிழக்கு கடற்கரையை நெருங்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் கணித்துள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களத்தின் விசேட அறிவிப்பு!

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version