இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 19 வயதுக்குட்பட்ட உலகக்கிண்ண போட்டி தொடரின் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று இந்திய மகளிர் கிரிக்கட் அணி ஒன்று பெற்ற முதலாவது கிரிக்கெட் உலக கிண்ணம் என்ற சாதனையை பெற்றுள்ளது.
தென்னாபிரிக்கா, போர்ட் ஒப் ஸ்பெயின், JB மார்க்ஸ் ஓவல் மைதானத்தில் இடம்பெற்ற போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணித்தலைவி களத்தடுப்பை தெரிவுசெய்தார். முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 17.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 68 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது. துடுப்பாட்டத்தில் ரைனா லுசெல்லா மக்டொனால்ட் 19 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். பந்துவீச்சில் டைட்டஸ் ரந்தீப் சது 04 ஓவர்களை வீசி 06 ஓட்டங்களை மாத்திரம் வழங்கி 02 விக்கெட்களை வீழ்த்தினார். அர்ச்சனா தேவி, பர்சவி சொப்ரா ஆகியோர் தலா 2 விக்கெட்களை கைப்பற்றினர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 14 ஓவர்களில் 03 விக்கெட்களை இழந்து 69 ஓட்டங்களை பெற்று 07 விக்கெட்களினால் வெற்றியீட்டியது. சௌமியா திவாரி ஆட்டமிழக்காது 24 ஓட்டங்களை பெற்றுகொண்டார்.
போட்டியின் நாயகியாக டைட்டஸ் ரந்தீப் சது தெரிவுசெய்யப்பட்டார். தொடர் நாயகியாக 293 ஓட்டங்களை பெற்று 9 விக்கெட்களையும் கைப்பற்றிய இங்கிலாந்து வீராங்கனை கிரேஸ் ஸ்ரீவன்ஸ் தெரிவானார்.
U19 பெண்களுக்கான முதலாவது உலகக்கிண்ணத்தினை இந்தியா மகளிர் அணி வீராங்கனை சபாலி வேர்மா தலைமையிலான இந்திய அணி வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது.
