சுதந்திர தினத்தை புறக்கணிக்க TNA தீர்மானம்!

இந்த ஆண்டு சுதந்திர தினத்தை புறக்கணிக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.

தமிழ் மக்களுக்கு உரிய முறையில் இன்னும் சுதந்திரம் கிடைக்காத காரணத்தினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவிக்கையில்,

“சுதந்திரம் கிடைத்த உடனேயே ஜனநாயகம் என்ற போர்வையில் பெரும்பான்மைக்கான ஒன்றாக அது மாற்றப்பட்டது. அதனால்தான் இந்த நாட்டில் வாழும் ஏனைய மக்களுக்கு சுதந்திரம் கிடைக்கவில்லை. சிங்கள பௌத்த மக்கள் சுதந்திரம் கிடைத்ததாக நினைக்கிறார்கள், எனினும் அவர்களும் இப்போது சுதந்திரம் கிடைக்கவில்லை என்பதை உணர்கிறார்கள். 75வது சுதந்திர தினத்தை எதிர்வரும் பெப்ரவரி 4ம் திகதி ஜனாதிபதி கொண்டாடும்போது இந்த நாட்டில் வாழும் எவருக்கும் அந்த சுதந்திரம் கிடைக்கவில்லை என்பதை உணர்வார்கள். எனவேதான் சுதந்திர தினத்தை கறுப்பு நாளாக பிரகடனம் செய்கின்றோம். நாட்டின் சுதந்திரத்தை முறையாகப் பெறுவதற்கான பிரச்சாரத்தை நாங்கள் ஆரம்பிக்கின்றோம்.” என்று தெரிவித்துள்ளார்.

சுதந்திர தினத்தை புறக்கணிக்க TNA  தீர்மானம்!
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version