கிளிநொச்சியினை சேர்ந்த ஊடகவியலாளர் S.N நிபோஜன் இன்று மாலை(30.01) கொழும்பு, தெஹிவளையில் இடம்பெற்ற இரயில் விபத்தில் மரணமடைந்துள்ளார்.
சுயாதீன ஊடகவியலாளராகவும், YouTube தளத்தில் வீடியோ பதிவுகளையிடும் ஊடகவியலாளராகவும் செயற்பட்டு வந்த இவர் இரயிலிலிருந்து வீழ்ந்து அல்லது இரயிலில் பயணித்த வேளையில் மறுபக்கமாக வந்த இரயில் மோதுண்டு வீழ்ந்து இறந்திருக்கலாம் என்ற சந்தேகங்கள் நிலவி வருகின்றன.
இறந்தவரின் உடல் களுபோவில போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், தெஹிவளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்கள்.
புகையிரதங்களில் பயணிக்கும் போது மிகவும் அவதானமாக இருக்க வேண்டும். அண்மைக்காலங்களில் புகையிரத விபத்துகளில் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிரகித்து வரும் நிலையில் அனைவரும் அவதானமாக செயற்படவேண்டும்.
