தேர்தல் அறிவிப்பு வர்த்தமானி வெளியானது.

உள்ளூராட்சி தேர்தலுக்கான வர்த்தமானி அறிவிப்பு வெளியாகியுள்ளது. இன்று அதி விசேட வர்த்தமானி மூலம் இந்த அறிவிப்பு வெளியிட்டுப்பட்டுள்ளது. அரசாங்க பதிப்பகத்தின் இணையதளத்தில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ள போதும் அதனை பார்வையிட முடியாதுள்ளது.

முன்னதாக உள்ளூராட்சி தேர்தல் நடைமுறைகளுக்கான அறிவிப்பினை வெளியிடுவதற்கான வர்த்தமானி அச்சிடலுக்கான உத்தியோகபூர்வ ஆவணங்கள், அந்தந்த மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகளினால் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்தெரிந்தார்.

நேற்று(29.01) அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம், வர்த்தமானி அச்சிடலுக்காக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவரது கையெழுத்துடனான கடிதம் இதுவரை கிடைக்கப்பெறவில்லை என ஊடக அறிக்கை மூலம் வெளிப்படுத்தியிருந்தார்.

இவ்வாறான நிலையில், வர்த்தமானி அறிவித்தலுக்கு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவரது கையொப்பம் தேவையில்லை எனவும், மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகளது ஆவணங்கள் மூலமே அறிவிப்பு வழங்கப்படும் என்றும், இந்த அடிப்படை விடயம் கூட அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்துக்கு தெரியவில்லை எனவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

கீழுள்ள லிங்க் மூலமாக அரசாங்க பதிப்பகத்தின் பக்கத்தினை பார்வையிட முடியும்.

http://documents.gov.lk/en/exgazette.php

தேர்தல் அறிவிப்பு வர்த்தமானி வெளியானது.
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version