வவுனியா நகரில் உமா மகேஸ்வரன், பத்மநாபா சிலைகள் அமைக்க அனுமதியில்லை

வவுனியா நகரத்தின் மணிக்கூட்டுக் கோபுரத்திற்கு அருகே புளொட் அமைப்பின் முன்னாள் தலைவர் அமரர் உமா மகேஸ்வரன் மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எப். அமைப்பின் முன்னாள் தலைவர் தலைவர் அமரர் பத்மநாபா ஆகிய இருவருக்கும் சிலைகள் நிறுவுவதற்கு நகரசபையில் தீர்மானம் எடுக்கப்பட்டு கட்டடம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தன.

இருப்பினும் அப்பகுதி வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் எல்லைக்குட்பட்டது எனவும், அனுமதியற்ற குறித்த கட்டடத்தை அமைப்பதனை நிறுத்துமாறு வீதி அபிவிருத்தி அதிகாரசபை நகரசபைக்கு கடிதம் மூலம் அறிவித்தல் வழங்கியுள்ளது.

முன்னதாக இந்த கட்டடம் அமைப்பது தொடர்பில் நகரசபை தலைவர் இ. கெளதமனிடம் ஊடகங்கள் கேட்ட போது நகரசபையின் தீர்மானத்துக்கு அமைவாக வட மாகாண ஆளுநரின் அனுமதியுடன் அமைக்கப்படுவதாக கூறியிருந்தார். ஆனால் தகவல் அறியும் சட்டத்தின் மூலமாக நகரசபையிடம் இந்த விடயம் தொடர்பில் கோரப்பட்ட வேளையில் ஆளுநரின் அனுமதி பெறப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நகரசபை அனுமதியினை வழங்கிய போதும், கட்டட பணிகள் சம்மந்தப்பட்ட கட்சிகாரர்களினால் நிர்மாணிக்கப்பட்டு வந்தன.

வவுனியா நகரில் உமா மகேஸ்வரன், பத்மநாபா சிலைகள் அமைக்க அனுமதியில்லை
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version