நாட்டின் கிழக்கு கடற்பகுதியில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இன்று (31.01) முதல் மறு அறிவித்தல் வரை மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என கடற்றொழில் மற்றும் நீரியல் வள திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டின் கிழக்கு கடற்பரப்பில் தற்போது பணியில் ஈடுபட்டுள்ள கடற்தொழிலாளர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்காள விரிகுடா கடற்பரப்பை சூழவுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை திருகோணமலைக்கு கிழக்கே சுமார் 455 கிலோ மீற்றர் தொலைவில் தென்கிழக்கு திசையில் நிலைகொண்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.