தளபதி 67 இல் ‘sandy’ !

நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் ஆரம்பித்தது. தளபதி 67 படத்தில் விஜய்க்கு 50 வயது தாதா கதாபாத்திரம் என்றும் அவருக்கு வில்லன்களாக 6 முன்னணி நடிகர்கள் நடிக்க இருப்பதாகவும் ஏற்கனவே தகவல்கள் வெளியாகியிருந்தது.

இதையடுத்து தளபதி 67 படத்தில் இணைந்துள்ள பிரபலங்களை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து வருகிறது.

அதன்படி, தளபதி 67 படத்தில் சாண்டி மாஸ்டர் நடிகராக இணைந்துள்ளார் என படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. மேலும், சஞ்சய் தத், பிரியா ஆனந்த் ஆகியோரும் இப்படத்தில் இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

தளபதி 67 இல் 'sandy' !

Social Share

Leave a Reply