கோவிட்-19 உலகளாவிய சுகாதார அவசரநிலை தொடர்கிறது!

கோவிட்-19 வைரஸ் பரவி உலகளாவிய தொற்றுநோயாக அறிவிக்கப்பட்டு நேற்றுடன் (31.01) 3 ஆண்டுகள் நிறைவடைந்தன.

கோவிட் தொற்றுநோய் ஒரு மாற்றத்தை எட்டியிருந்தாலும் அதன் ஆபத்து இன்னும் குறையவில்லை. எனவே கோவிட்-19 உலகளாவிய சுகாதார அவசரநிலை தொடர்ந்து அமுலில் இருக்கும் என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில், அவர் மேலும் தெரிவிக்கையில், அதிகபட்ச சுகாதார பாதுகாப்பு நடைமுறைகள் பேணப்பட வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

கொரோனா தொற்றுநோய் தாக்கத்தை மட்டுப்படுத்த அது மிகவும் கவனமாக நிர்வகிக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

தற்போது, ​​உலகம் முழுவதும் 6.8 மில்லியன் பேர் கோவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், கடந்த டிசம்பரில் இருந்து, உலகம் முழுவதும் பதிவான கோவிட் இறப்புகளின் எண்ணிக்கை தற்போது குறிப்பிடத்தக்க அளவில் மேலும் அதிகரித்து வருகிறது.

அதன்படி, கடந்த 8 வாரங்களில் உலகம் முழுவதும் 170,000 கோவிட் இறப்புகள் பதிவாகியுள்ளதாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் தெரிவித்துள்ளார்.

 

கோவிட்-19 உலகளாவிய சுகாதார அவசரநிலை தொடர்கிறது!
https://www.facebook.com/101424405897210/photos/a.195486213157695/195485669824416/

Social Share

Leave a Reply