சுதந்திர தின கொண்டாட்டத்தில் நாங்கள் கலந்துகொள்ள மாட்டோம்!

நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள இவ்வேளையில் பெருமளவான பணத்தைச் செலவு செய்து நடத்தப்படும் சுதந்திரக் கொண்டாட்டத்தில் கர்தினால் ஆண்டகை உட்பட கத்தோலிக்க திருச்சபையினர் பங்குபற்ற மாட்டார்கள் என அருட்தந்தை சிறில் காமினி தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

“ கடனை அடைக்க முடியாமல் பொருளாதாரத்தில் வீழ்ச்சி கண்ட ஒரு நாட்டில், 30% க்கும் அதிகமான மக்கள் பட்டினி கிடக்கும் நாட்டில், குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாட்டால் அவதிப்படும் நாட்டில், அதிக மக்கள் தொழிலை இழந்திருக்கும் நாட்டில், சட்டத்தின் ஆட்சி சீர்குலைந்த நாட்டில், மனித உரிமைகள் மீறப்படும் நாட்டில், வழங்க முடியாத நாட்டில், தோல்வியடைந்த நாட்டில் 200 மில்லியன் ரூபாய்களுக்கு மேல் செலவு செய்து பெருமையுடன் கொண்டாடுவதற்கு என்ன சுதந்திரம் இருக்கிறது என்று நாங்கள் கேள்வி எழுப்புகிறோம். இது மக்களுக்கு எதிரான பெரும் குற்றம் மற்றும் வீண் விரயம். எனவே சுதந்திர விழாவில் கருதினால் ஆண்டகை பங்கேற்க மாட்டார் மேலும் எந்தவொரு கத்தோலிக்க அருட்தந்தையர்களும் பங்கெடுக்க மாட்டார்கள் என்பதை கூறிக்கொள்கிறேன்” என அருட்தந்தை சிறில் காமினி தெரிவித்துள்ளார்.

சுதந்திர தின கொண்டாட்டத்தில் நாங்கள் கலந்துகொள்ள மாட்டோம்!

Social Share

Leave a Reply